சிறுவனிடம் செருப்பை கழற்ற சொல்லும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். 
செய்திகள்

அமைச்சர் செருப்பை சிறுவன் கழற்றிய விவகாரம்- தலைமை செயலாளர், டி.ஜி.பி.க்கு நோட்டீஸ்

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செருப்பை சிறுவன் கழற்றிய விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் 15 நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி பழங்குடியினர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மாலை மலர்

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் கடந்த 6-ந்தேதி வளர்ப்பு யானைகளுக்கான நலவாழ்வு முகாம் தொடங்கியது.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அங்குள்ள விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது சிறுவன் மசினகுடி போலீசில் புகார் செய்தார். அவரது தாய் காளி, என் மகனிடம் மன்னிப்பு கேட்கும் வரை பிரச்சனையை விடமாட்டோம் என்றார்.

இதையடுத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஊட்டி விருந்தினர் மாளிகையில் சிறுவன் மற்றும் அவரது தாய், பழங்குடியினரை அழைத்து பேசினார். பின்னர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். இதனால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் கோவையை சேர்ந்த சமூக நீதி கட்சி தலைவர் பன்னீர் செல்வம் இந்த பிரச்சனை தொடர்பாக தேசிய பழங்குடியின ஆணையத்தில் புகார் அளித்தார்.

இதனை விசாரித்த பழங்குடியின ஆணையம் பழங்குடியின சிறுவனின் செருப்பை கழற்ற வைத்த விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பி உள்ளது. இது தொடர்பாக 15 நாட்களுக்குள் பதில் அளிக்கும் படி தமிழக தலைமை செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.