திருச்சி:
மலேசியாவை சேர்நதவர் லிங்கமாரி. இந்திய வம்சா வழியை சேர்ந்த இவரது மனைவி பரதேவி. இவர்கள் 2 பேரும் இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்தனர். பல இடங்களுக்கு சென்ற பின்பு திருச்சிக்கு வந்த அவர்கள் மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஒட்டலில் அறை எடுத்து தங்கினர்.
இந்த நிலையில் வெளியில் சென்ற பரதேவி திடீரென மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தானாக வழிதவறி எங்கேனும் சென்று விட்டாரா? அல்லது மர்ம நபர்கள் யாராவது கடத்தி சென்றார்களா? என்று தெரியவில்லை.
இது குறித்து அவரது கணவர் லிங்கமாரி கொடுத்த புகாரின் பேரில் கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான வெளி நாட்டு பெண்ணை தீவிரமாக தேடி வருகிறார்கள்.