செய்திகள்

பென்னாகரத்தில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

பென்னாகரத்தில் 3 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பென்னாகரம்:

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு போக்குவரத்து பணி மனையில் தி.மு.க. தொழிற் சங்கமான எல்.பி.எப்., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யு.சி., எம்.எல்.எப்., எச்.எம்.எஸ் உள்பல பல போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கடந்த 4-ந் தேதி தமிழக அரசு சென்னை கோட்டை முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்களுக்கு விடுமுறை கொடுக்காமல் சம்பளம் பிடித்தம் செய்துள்ளார்கள். 

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகையினை உடனே வழங்க வேண்டும். தீபாவளி முன்பணம் உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் 10-க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள் ஈடுப்பட்டனர்.

SCROLL FOR NEXT