செய்திகள்

மாத பஸ் பாஸ் கட்டணம் உயர்வா? இல்லையா? - போக்குவரத்துத்துறை செயலாளர் விளக்கம்

சென்னை மாநகர பேருந்துகளில் மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் உயரலாம் என இன்று காலை செய்திகள் வெளியான நிலையில், இது தொடர்பாக போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் விளக்கமளித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

தமிழகத்தில் அரசுப்பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் கடந்த மாதம் கனிசமாக உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் இறங்க, கட்டண உயர்வை சிறிதளவு குறைத்து அரசு அறிவித்தது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் வழங்கப்படும் ஒருநாள் பயண டிக்கெட், மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் ஆகியவை உயராது என முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 1000 ரூபாய் மாத பஸ் பாஸ் 1300 ரூபாய் ஆக உயர்வதாகவும், 50 ரூபாய் ஒரு நாள் பயண டிக்கெட் 80 ரூபாய் உயர்வதாகவும் இன்று காலை தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், கட்டண உயர்வு என்ற செய்தியை போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் மறுத்துள்ளார். பஸ் பாஸ் கட்டண உயர்வு என்று பரவும் செய்தி முற்றிலும் தவறானது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.