மின்சார ரெயில் சேவை 
செய்திகள்

சென்னை கடற்கரை - வேளச்சேரி : இரு மார்க்கத்திலும் மதியம் 2.10 மணி வரை ரெயில்கள் ரத்து

சென்னை கடற்கரை - வேளச்சேரி வரை இயக்கப்படும் மின்சார ரெயில்கள் மதியம் 2.10 மணி வரை இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகின்றன.

மாலை மலர்

சென்னை:

வேளச்சேரி முதல் சென்னை கடற்கரை வரையிலான பகுதியில் ரெயில்வே ஊழியர்கள் பராமரிப்பு பணிகளில் இன்று ஈடுபடுகின்றனர்.

இதன் காரணமாக வேளச்சேரி முதல் சென்னை கடற்கரை வரையிலான இருமார்க்கத்திலும் மதியம் 2.10 மணி வரை ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

இதேபோல், சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான இருமார்க்கத்திலும் பராமரிப்பு பணி காரணமாக சில ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது  என தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.