தமிழ்நாடு போலீஸ் (பழைய படம்) 
செய்திகள்

தேர்வாகி பயிற்சியில் இருக்கும் 8538 காவலர்கள் உடனடியாக பணியில் சேர வேண்டும்: தமிழக அரசு

பயிற்சியில் இருக்கும் 8538 காவலர்கள் உடனடியாக பணியில் சேர வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மாலை மலர்

கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கையை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சுதாதாரத்துறையைச் சேர்ந்தது. டாக்டர்கள், நர்ஸ்கள், தூய்மைப்பணியாளர்கள் போன்றோர் இதில் முன்னின்று செயல்பட்டு வருகிறார்கள்.

மற்றொன்று போலீஸ் துறை. இவர்ளுடைய வேலைதான் சவால் நிறைந்ததாக இருக்கிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்த்தல், சாலைகளில் விதிமுறையை மீறி செல்பவர்களை தடுத்து அபராதம் விதித்தல், தனிமைப்படுத்தும் பகுதியில் பாதுகாப்பு ஆகிய வேலைகளை போலீஸ் துறை செய்து வருகிறது.

பல்வேறு இடங்களில் மக்கள் நடமாட்டத்தை ட்ரோன் மூலமாகவும் கண்காணித்து வருகிறது. தற்போது நேற்றில் இருந்து வரும் புதன்கிழமை வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருகிறார்கள்.

29-ந்தேதிக்குப்பிறகும் இதே நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே போலீசார் 24 மணி நேரமும் வேலை செய்து வருவதால் சோர்வடையும் நிலை ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.

உதாரணத்திற்கு ஒரு காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டால் அந்த காவல் நிலையத்தை சீல் வைத்து அங்கு வேலைப்பார்ப்பவர்களை தனிமைப்படுத்தும் நிலை ஏற்படுகிறது. மேலும் 50 வயதிற்கு மேற்பட்ட நபர்களை கொரோனா தாக்க வாய்ப்புள்ளதால் அவர்களை முன்னிறுத்த அரசு யோசிக்கிறது.

வரும் நாட்கள் மிகமிக முக்கியமானவை. ஒருவேளை மே 3-ந்தேதிக்குப்பின்னும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கபட்டால் மக்கள் விரக்தியடைந்து வெளியேற வாய்ப்புள்ளது.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தற்போது தேர்வாகி பயிற்சியில் இருக்கும் 8538 பேரும் மே 3-ம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும். பணியில் சேருவதற்கு முன்பாக 8538 பேருக்கும் சுவாச பிரச்சனை மற்றும் காய்ச்சல் பரிசோதனை செய்வது கட்டாயம்’’என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.