சென்னை:
பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் புறநகர் ரெயில்களின் சேவை குறைக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், விடுமுறை தினமான இன்று காலை முதல் ரெயில்களின் சேவை குறைக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் ரெயில் கோடம்பாக்கம் வரை மட்டுமே செல்லும். அங்கிருந்து வேறு ரெயிலில் தாம்பரம் செல்ல வேண்டும். ரெயில்வேயின் இந்த ஏற்பாடு பயணிகளை கடுமையாக அலைக்கழிக்க வைத்துள்ளது.
இதனால் கோடம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. உள்ளூர் பயணிகள் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் அவதிப்பட்டனர். ரெயில்களும் பல மணி நேரம் காலதாமதமாக வந்து சென்றது பயணிகளை சிரமத்துக்கு உள்ளாக்கியது.