ராயபுரம்:
ஆந்திராவை சேர்ந்தவர்கள் குமார் (30), கெங்கப்பன். இவர்கள் திருவொற்றியூர், விம்கோ நகரில் தங்கி ரெயில்வேயில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.
நேற்று நள்ளிரவு அவர்கள் 2 பேரும் விம்கோ நகர்- கத்திவாக்கம் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.
அப்போது அவ்வழியே சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் 2 பேர் மீதும் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட குமாரும், கெங்கப்பனும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இது குறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் 2 பேரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பலியான 2 பேரும் நள்ளிரவில் எதற்காக இங்கு வந்தனர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.