விபத்து 
செய்திகள்

பேராவூரணி அருகே டிராக்டர் மோதி சலவை தொழிலாளி பலி

பேராவூரணி அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் சலவை தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

பேராவூரணி:

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே ஆத்தாளூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம்(வயது69) இவர் சலவை கடை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் பன்னீர்செல்வம் தனது சலவை கடையில் இருந்து மதியம் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். அப்போது எதிரே மணல் ஏற்றி வந்த டிராக்டர், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் பேராவூரணி போலீசார் விரைந்து வந்து பன்னீர்செல்வம் உடலை கைப்பற்றி அரசு மருத்து வமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்து போன பன்னீர் செல்வத்திற்கு தமிழ்செல்வி என்ற மனைவியும், ஹேமா என்ற மகளும் உள்ளனர்.

இந்த விபத்து குறித்து பேராவூரணி போலீசார் வழக்குபதிவு செய்து, டிராக்டர் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.