செய்திகள்

வாழப்பாடி அருகே டிராக்டர் மோதி தொழிலாளி பலி

வாழப்பாடி அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை மலர்

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த கோணஞ்செட்டியூர் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் விவசாய தொழிலாளி மாதையன் (வயது 52). இவர் வீட்டு விசே‌ஷத்திற்காக, நேற்று காலை, அருநூற்றுமலை அடிவாரம் கீரைப்பட்டி கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

வாழை இழையை அறுத்து கொண்டு அருநூற்றுமலை - பேளூர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த டிராக்டர் அவர் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி மாதையன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.