கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா 
செய்திகள்

நாளை முதல் கொடைக்கானலை சுற்றி பார்க்க அனுமதி- கலெக்டர் விஜயலட்சுமி

நாளை முதல் கொடைக்கானலை சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க அனுமதிக்கப்படுவர் என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி கூறியிருப்பதாவது:

நாளை முதல் கொடைக்கானலை சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க அனுமதிக்கப்படுவர்.

வெளி மாவட்ட பயணிகள் இ-பாஸ் பெறுவது கட்டாயம். உள்மாவட்ட பயணிகளுக்கு அடையாள அட்டை அவசியம்

முதற்கட்டமாக கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஸ் பூங்கா திறக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.