ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில் விக்டர் மோசஸ் கொடுத்த பந்தை அல்வாரோ மொராட்டா கோலாக மாற்றினார். முதல்பாதி நேரத்தின் கூடுதல் நேரத்தின் கடைசி நிமிடத்தில் (45+1) டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியின் கிறிஸ்டியன் எரிக்சன் கோல் அடித்தார். இதனால் முதல்பாதி நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல்களுடன் சமநிலையில் இருந்தது.
2-வது பாதி நேர ஆட்டத்தில் டோட்டன்ஹாம் வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கண்மூடி விழிப்பதற்குள் டேல் அலி 62 மற்றும் 66-வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்தார். இதனால் டோட்டன்ஹாம் 3-1 என முன்னிலை பெற்றது. அதன்பின் செல்சியா அணியால் ஆட்டம் முடியும் வரை கோல் அடிக்கவில்லை. இதனால் டோட்டன்ஹாம் 3-1 என வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 28 ஆண்டுகளுக்குப் பிறகு செல்சியைாவை அந்த அணி வீழ்த்தியுள்ளது.