ஹாரி கேன் 
செய்திகள்

கால்பந்து: யுவான்டஸை 3-2 என வீழ்த்தியது டோட்டன்ஹாம்

இன்டர்நேஷனல் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஹாரி கேனின் அபார கோலால் யுவான்டஸை 3-2 என வீழ்த்தியது டோட்டன்ஹாம்.

மாலை மலர்

ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில் டோட்டன்ஹாம் அணியின் எரிக் லமேலா கோல் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் டோட்டன்ஹாம் 1-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியதும் யுவான்டஸ் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் 56-வது நிமிடத்தில் ஹிகுயைன், 60-வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் கோல் அடித்தனர். ஆனால் 65-வது நிமிடத்தில் டோட்டன்ஹாம் அணியின் லூகாஸ் மவுரா கோல் அடிக்க ஸ்கோர் 2-2 என சமநிலை அடைந்தது.