தலைப்புச்செய்திகள்

பொள்ளாட்சியில் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுமா அதிமுக? மக்கள் கூறுவது என்ன?

பொள்ளாட்சி தொகுதியில் அதிமுகவிற்கே அதிக ஆதரவு உள்ளது.

தமிழ்நாடு அரசியலில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆளும் திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இடையே பலத்த போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்கியுள்ள போதிலும், பிரதான போட்டி என்னவோ திராவிட ஜாம்பவான்களுக்கு இடையேதான் இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இருப்பினும், இளைஞர்களிடையே தவெகவிற்கு ஓரளவு ஆதரவு பெருகி வருவதாகவும் ஒரு சில கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு மாலைமலர் தரப்பில் மக்களிடையே கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டம் பொள்ளாட்சி பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கேட்பில், அப்பகுதியில் அதிமுகவிற்கே அதிக ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது. இரண்டாவது இடத்தில் திமுக உள்ளது.

தற்போது அதிமுக ஜெயராமன் அங்கு சட்டமன்ற உறுப்பினராக இருப்பது குறிப்பிடத்தக்கது.