தலைப்புச்செய்திகள்

சுவேந்து அதிகாரி பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசின் 15 ஆண்டுகால ஆட்சியை பாஜக முடிவுக்குக் கொண்டுவந்தது.

மேற்கு வங்கம், தமிழகம் மற்றும் கேரளாவில் அரசு அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.இருப்பினும் தமிழ் நாட்டில் குழப்பங்கள் சூழ்ந்துள்ளது, பெரும்பான்மை இல்லாததால் அரசு அமைப்பதில் சற்று தாமதமாகிகொண்டுடே இருக்கிறது.

சமீபத்தில் நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலில் 207 இடங்களை வென்றதன் மூலம், வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசின் 15 ஆண்டுகால ஆட்சியை பாஜக முடிவுக்குக் கொண்டுவந்தது.

மேலும் இதனைத்தொடர்ந்து மேற்கு வங்க புதிய முதலமைச்சர் பதவியேற்பு விழா இன்று நடைபெறவுள்ளது. மேற்கு வங்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் முன்னிலையில், பாஜகவின் சுவேந்து அதிகாரி இன்று மேற்கு வங்கத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.

இந்தப் பதவியேற்பு விழா இன்று கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் நடைபெறுகிறது. நீண்டகால திரிணாமுல் காங்கிரஸ் விசுவாசியும், பதவி விலகும் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முன்னாள் நெருங்கிய உதவியாளருமான சுவேந்து அதிகாரி, வங்காளத்தின் முதல் பாஜக முதலமைச்சர் ஆவார்.