தலைப்புச்செய்திகள்

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' ட்ரெய்லர் வெளியானது!

பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு இக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

பிச்சைக்காரன் பட வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சசி - விஜய் ஆண்டனி மீண்டும் இணைந்துள்ளப் படம் நூறு சாமி.

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள இப்படத்தில் ஸ்வாசிகா, அஜய் திஷன், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், இயக்குநர் பாலாஜி சக்திவேல் மற்றும் காவ்யா அனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜூன் 19ம் தேதி படம் வெளியாக உள்ளநிலையில், இன்று டிரெய்லர் வெளியாகி உள்ளது.

உண்மைச் சம்பவங்களைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் ஒரு உணர்வுப்பூர்வமான குடும்பக் கதையாக உருவாகி உள்ளது.

SCROLL FOR NEXT