தலைப்புச்செய்திகள்

மத்திய அமைச்சர் எல். முருகன் ராஜினாமா ஏற்பு!

மத்திய அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் பதவி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு எல்.முருகன், பிரதமர் மோடிக்கு ராஜினாமா கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் அவரது ராஜினாமா ஏற்றுக்கொண்டுள்ளார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையின் பேரில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 75, உட்பிரிவு (2)-ன் கீழ் இந்த ராஜினாமா உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஏற்கப்பட்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியை பலப்படுத்தும் முழுநேர அரசியல் பணியில் ஈடுபடுவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.

முருகன் செப்டம்பர் 2021 முதல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார்.  மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவரது பதவிக்காலம் 2030 ஏப்ரல் வரை இருந்தது.

இவருடன் சேர்த்து சமீபத்திய மாதங்களில் ஜார்ஜ் குரியன், ரவ்நீத் சிங் பிட்டு ஆகியோரும் தங்களது அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளதால், விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT