tvk vijay adhav arjuna 
தலைப்புச்செய்திகள்

TN ELection 2026 | ஆதவ் அர்ஜுனாவை ஆதரித்து வில்லிவாக்கத்தில் நாளை த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரம்

வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனாவை ஆதரித்து நாளை தேர்தல் பரப்புரை செய்ய இருக்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்.

தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். கடந்த 30-ந்தேதி பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் தனது சொந்த தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கொளத்தூரில் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் வில்லிவாக்கம் தொகுதியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள முடிவு செய்திருந்தார். அளவுக்கு அதிகமாக கூட்டம் கூடியதால், அசம்பாவிதத்தை தவிர்க்க தனது தேர்தல் பிரச்சார திட்டத்தை ரத்து செய்தார்.

பின்னர் திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்து, பின்னர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இந்த நிலையில் நாளை வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனாவை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.