தலைப்புச்செய்திகள்

புதுச்சேரி இடைத்தேர்தலில் த.வெ.க.-காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?

சட்டசபை தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் தவெக ஆட்சியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது.

புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி சட்டசபை தேர்தலில் தட்டாஞ்சாவடி, மங்கலம் ஆகிய 2 தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இடைத்தேர்தல்

தேர்தலுக்கு பிறகு மங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியில் அவர் தொடர்கிறார். தட்டாஞ்சாவடி தொகுதியை அவர் ராஜினாமா செய்தார். இதற்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் அக்டோபர் 6-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

என்.ஆர்.காங்கிரஸ்

தேர்தலில் ஆளும் கூட்டணியான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. அசோக்ஆனந்து போட்டியிட உள்ளார். இதனை முதல்-மந்திரி ரங்கசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த விழாவில் அறிவித்தார்.

திமுக கூட்டணி

கடந்த தேர்தலின்போது என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக ரங்கசாமியும், அவரை எதிர்த்து காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், த.வெ.க. கூட்டணியில் இடம் பெற்ற நேயம் மக்கள் கழகம் விநாயகம் ஆகியோர் போட்டியிட்டனர்.

த.வெ.க.வுக்கு ஆதரவு

சட்டசபை தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் தவெக ஆட்சியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளும் தவெக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிக்கின்றன.

முதல்-மந்திரி ரங்கசாமி

தமிழகத்தில் த.வெ.க.வுடன் அமைந்துள்ள கூட்டணி புதுச்சேரியிலும் தொடருமா? என கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் தேர்தலுக்கு பிறகு புதுவை காங்கிரசாரை த.வெ.க. நிர்வாகிகள் யாரும் சந்திக்கவே இல்லை. ஆனால் புதுச்சேரிக்கு வந்திருந்த த.வெ.க. பொது செயலாளரும், அமைச்சருமான ஆனந்து, முதல்-மந்திரி ரங்கசாமியை சந்தித்து சென்றார்.

தமிழக முதலமைச்சர் விஜய்

அதுமட்டுமில்லாமல், அமைச்சர் ஆனந்து பிறந்த நாளில் முதல்-மந்திரி ரங்கசாமி, சென்னைக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அதுபோல முதல்-மந்திரி ரங்கசாமி பிறந்தநாளுக்கும் தமிழக முதலமைச்சர் விஜய் போன்மூலம் வாழ்த்து தெரிவித்தார். தேர்தலுக்கு முன்பு ரங்கசாமி, விஜய் இடையில் இருந்த நட்பு இப்போதும் தொடர்கிறது. இதனாலேயே புதுச்சேரியில் காங்கிரசை த.வெ.க. தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதோடு அகில இந்திய அளவிலான இந்தியா கூட்டணியில் த.வெ.க. இதுவரை இடம் பெறவில்லை. அதோடு சமீபத்தில் பிரதமர் வேட்பாளராக விஜய்யை த.வெ.க.வினர் முன்னிருத்துவது காங்கிரசில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் வேட்பாளர்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வோம் என தமிழக அமைச்சர்கள் கொந்ததளித்தனர். இதனிடையே த.வெ.க.வுடன் கூட்டணி குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் சமீபத்தில் சந்தேகத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவர் அளித்த பேட்டியில், முதல்-மந்திரி ரங்கசாமி, த.வெ.க.வுக்கு வேட்பாளரைக்கூட விட்டுத் தருவார் என கூறியிருந்தார்.

அதேநேரத்தில் கடந்த தேர்தலில் த.வெ.க. கூட்டணியில் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்ட நேயம் மக்கள் கழகம் மீண்டும் போட்டியிட த.வெ.க.விடம் வாய்ப்பு கேட்டுள்ளது. நேயம் மக்கள் கழக வேட்பாளர் விநாயகம், தேர்தல் பணியை தொடங்கி செய்தும் வருகிறார்.

தட்டாஞ்சாவடி தொகுதி

இடைதேர்தலில் த.வெ.க. நேரடியாக போட்டியிட எந்த முனைப்பும் காட்டவில்லை. இதனால் த.வெ.க. ஆதரவு யாருக்கு? என தொண்டர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. கடந்த தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான வைத்திலிங்கம் எம்.பி. 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

விடுதலை சிறுத்தைகள்

இதனால் காங்கிரஸ் களம் இறங்கும் வாய்ப்பு குறைவாகவே தெரிகிறது. நேயம் மக்கள் கழக வேட்பாளரை த.வெ.க., காங்கிரஸ் மற்றும் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் ஆகியவை ஆதரிக்கலாம் என தெரிகிறது.

தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி

தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி உடைந்துள்ளது. இதனால் தட்டாஞ்சாவடி இடைதேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிடும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் மும்முனைப்போட்டி ஏற்படலாம் என கூறப்படுகிறது.

என்.ஆர். காங்கிரஸ்

ஏற்கனவே என்.ஆர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்தன், கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த நேயம் மக்கள் கழகம் விநாயகம் ஆகியோர் தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் தி.மு.க.வில் டாக்டர் நித்தீசும் களத்தில் இறங்கியுள்ளார்.

SCROLL FOR NEXT