தலைப்புச்செய்திகள்

Today Rasipalan | இன்றைய ராசிபலன் 25.7.2026: இவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களைக் காணலாம்.

மேஷம்

எதிரிகளின் பலம் கூடும் நாள். எதிர்பார்த்த காரியம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் தொல்லைகள் உண்டு.

ரிஷபம்

அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அலைபேசி வழியில் ஆச்சரியப்படத்தக்க தகவல் வந்து சேரும். தொழில் முன்னேற்றம் உண்டு.

மிதுனம்

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். புதிய தொழில் தொடங்கும் திட்டத்தை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் கவனம் தேவை.

கடகம்

தொல்லை தந்தவர்கள் தோள் கொடுத்து உதவும் நாள். தைரியத்தோடும். தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். வருமானம் திருப்தி தரும்.

சிம்மம்

தேவைக்கேற்ப பணம் வந்து சேரும். உறவினர்கள் வழியில் உருவான மனக்கசப்பு அகலும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றி சிந்திப்பீர்கள்.

கன்னி

அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும். தொழில் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். பிள்ளைகள் வழியில் சுபச்செய்தி வந்துசேரும்.

துலாம்

புது முயற்சி வெற்றி பெறும் நாள். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். எந்தக் காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்துமுடிப்பீர்கள்.

விருச்சிகம்

வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வரன்கள் வாயிற்கதவைத் தட்டும். தொழில் சீராக நடைபெறும்.

தனுசு

வசதிகள் பெருகும் நாள். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் தலைமை பொறுப்புகள் வந்து சேரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

மகரம்

இனிய சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். கூட்டு தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

கும்பம்

சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும் நாள். தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். தொழில் ரீதியாக பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.

மீனம்

நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். வாங்கல், கொடுக்கல்களில் கவனம் தேவை. மற்றவர்களுக்கு பொறுப்புகள் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.