தலைப்புச்செய்திகள்

தமிழ்நாடு பட்ஜெட் 2026-27: ஒரு ரூபாயில் வரவு மற்றும் செலவு எவ்வளவு தெரியுமா?

குறுகிய அரசியல் ஆதாயம் இல்லாமல் 15 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டம் முன்னெடுக்கப்படும்.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் நேற்று (ஆகஸ்ட் 05) தாக்கல் செய்தார்.

தமிழ்நாட்டில் கடந்த மே 10-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. ஆட்சி பொறுப்பேற்ற இரண்டரை மாதங்களுக்கு பிறகு தங்களது முதல் பட்ஜெட்டை சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

காலை 10.00 மணிக்கு பட்ஜெட் தாக்கலை தொடங்கிய அமைச்சர் மரிய வில்சன் சுமார் இரண்டரை மணி நேரம் பட்ஜெட் தாக்கல் செய்து மதியம் 12:31 மணிக்கு உரையை முடித்தார். நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஒரு ரூபாயின் வரவு மற்றும் செலவு விவரங்களை தொடர்ந்தும்.

ஒரு ரூபாயில் வரவு:

  • பொதுக்கடன் -33.1%

  • கடன்களின் வசூல் மற்றும் மூலதன வரவு -0.1%

  • மத்திய அரசிடம் இருந்து பெறும் உதவி மானியங்கள்- 6.3%

  • மத்திய வரிகளில் பங்கு - 11.9%

  • மாநிலத்தின் சொந்த வரி வருவாய் -43.3%

  • மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் - 5.3%

ஒரு ரூபாயில் செலவு:

  • மூலதனச் செலவு -10.9%

  • வட்டி செலுத்துதல் -15.0%

  • உதவித் தொகைகளும் மானியங்களும் - 33.2%

  • கடன்களை திருப்பிச் செலுத்துதல் -9.9%

  • சம்பளங்கள் - 17.3%

  • ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால பலன்கள் - 8.0%

  • கடன் வழங்குதல் - 1.9%

  • செயல்பாடுகளும் பராமரிப்புகளும் -3.8%

2 ஆண்டுகள் அவகாசம்:

பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் மரிய வில்சன் தனது உரையில், "போதிய நிதி ஆதாரம் தேவைப்படுகிறது. நிதி ஆதாரங்களை பெருக்காவிடில் நலத்திட்டங்களை தொடர முடியாத நிலை ஏற்படும். போதிய நிதி ஆதாரங்களை பெருக்கி நலத்திட்டங்களை செயல்படுத்தும் முயற்சியில் வெற்றி பெறுவோம்.

தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாய் ரூ.2,54,575 கோடியாக உள்ளது. தமிழ்நாட்டின் நிதி நிர்வாகத்தை சீரமைக்க குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தேவைப்படும். கடந்த ஆட்சியை போல் குறுகிய அரசியல் ஆதாயம் இல்லாமல் 15 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டம் முன்னெடுக்கப்படும்.