உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம் நடந்த மாநாட்டில் பேசிய மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, தற்போதுள்ள சூழலில் தினமும் 1,000 கோடி ரூபாயை இந்தியா இழந்து வருவதாக கூறினார்.
சர்வதேச அரங்கில் தற்போது கொள்முதல் செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு சுமார் 107 டாலராக உள்ளது.
இந்த நிலையில் தரகு நிறுவனமான கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை சுமார் 120 டாலராக உயர்ந்தால், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.25 முதல் 28 வரை உயரக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
தற்போது மூன்று ரூபாய் அதிகரித்துள்ள கச்சா எண்ணெய் விலை உயர்வால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.103.67 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.95.25 ஆகவும் உள்ளது.