ஒப்போ A7 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சில உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் 10,000mAh பேட்டரி உள்ளது; இதுவே அந்நிறுவனம் இதுவரை ஒரு ஸ்மார்ட்போனில் வழங்கிய மிகப்பெரிய பேட்டரி ஆகும்.
தற்போது, இதைவிட பெரிய, அதாவது 12,000mAh பேட்டரி கொண்ட மற்றொரு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த ஒப்போ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. வரவிருக்கும் இந்த ஸ்மார்ட்போன், சீனாவின் சான்றிதழ் தரவுத்தளம் ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தரவுத்தள பதிவின்படி, இதில் 5G கனெக்டிவிட்டி இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது. இருப்பினும், இந்த ஸ்மார்ட்போனின் பெயர், விலை, வெளியீட்டு காலம் மற்றும் பிற தொழில்நுட்ப விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
சீனாவின் MIIT தரவுத்தளத்தில், பெயர் குறிப்பிடப்படாத ஒரு ஒப்போ ஸ்மார்ட்போன் கண்டறியப்பட்டுள்ளதாக 'XpertPick' செய்தி வெளியிட்டுள்ளது; இது விரைவில் சந்தைக்கு வரக்கூடும் என்பதை குறிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் PNC110 என்ற மாடால் எண்ணுடன் பட்டியலிடப்பட்டுள்ளது.
இது ஒப்போ இதுவரை தயாரித்த ஸ்மார்ட்போன் மாடல்களிலேயே மிகப்பெரிய பேட்டரி கொண்டதாக இருக்கலாம். இந்த ஒப்போ PNC110 மாடலில் 11,640mAh திறன் கொண்ட பேட்டரி (இதன் பொதுவான திறன் 12,000mAh எனக் கருதப்படுகிறது) இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.
இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், ஒப்போ A7 ப்ரோ மேக்ஸ் மாடலுக்கு பதிலாக, மிகப்பெரிய பேட்டரி கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போனாக இந்த புதிய மாடல் அமையும். ஒப்போ A7 ப்ரோ மேக்ஸ், கடந்த செப்டம்பர் மாதம் சீனாவுக்கு வெளியே பல நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் பேஸ் மாடல் (6GB ரேம் + 256GB மெமரி) 599 யூரோ (சுமார் 61,000 ரூபாய்) விலையில் விற்பனைக்கு வந்தது. இதில் 10,000mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. மேலும், இது குவால்காம் நிறுவனத்தின் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 சிப்செட், அட்ரினோ 629 GPU, 8GB வரை LPDDR4x ரேம் மற்றும் 256GB UFS 3.1 மெமரி கொண்டுள்ளது.
மேலும், ஒப்போ A7 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் 1.5K 1272x2772 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இது 120Hz வரையிலான ரிப்ரெஷ் ரேட் 50MP பிரைமரி கேமரா, டூயல்-ஆக்சிஸ் OIS, மேலும் இரு 2MP கேமரா சென்சார்கள் மற்றும் 50MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.