தலைப்புச்செய்திகள்

நாகலாந்தில் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட 14 நபர்களை மீட்ட பாதுகாப்புத் துறை

காங்போக்பி மாவட்ட பாதிரியார் கொல்லப்பட்ட சம்பவத்தில் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட நாகா மக்கள் விடுவிப்பு

இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள நாகலாந்து மாநிலத்தில் பணயக் கைதிகளாக கைது செய்யப்பட்ட 14 நபர்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மணிப்பூரின் காங்போக்பி மற்றும் சேனாபதி மாவட்டங்களில், பாதுகாப்பு படையினர் தொடர்ந்து நடத்திய மீட்பு பணியில் நாகா சமூகத்தை சேர்ந்த 14 நபர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் 13ஆம் தேதியன்று காங்போக்பி மாவட்டத்தில் உள்ள தேவாலயத்தில் மூன்று பாதிரியார்கள் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து அந்த பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்களை நாகா மற்றும் குகி பிரிவை சேர்ந்த குழுக்கள் பணயக்கைதிகளாக கடத்தி சென்றனர்.

இதை தொடர்ந்து நடந்த மீட்பு நடவடிக்கையில் 11 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 14 நாகா பணயக்கைதிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT