தலைப்புச்செய்திகள்

மத்திய கிழக்கு போர்: மாற்று எரிசக்தி ஆதாரங்களை ஆராயுமாறு அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

விஜித் பாரத் 2047 என்பது வெறும் வாக்குறுதி மட்டுமல்ல, அது ஒரு அர்ப்பணிப்பு என்பதை வலியுறுத்திய பிரதமர், சீர்திருத்தங்களை வீரியத்துடன் செயல்படுத்துமாறு தனது அமைச்சர்களைக் கேட்டுக்கொண்டார்.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியின் தொடர்ச்சியான முற்றுகை ஆகியவை வளைகுடாவிலிருந்து இந்தியாவிற்கான எரிபொருள் விநியோகத்தைத் தடைசெய்துள்ளன.

இந்நிலையில் ஐந்து நாடுகளுக்கான சுற்றுப்பயணத்திலிருந்து பிரதமர் திரும்பிய நிலையில் நேற்று மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

சுமார் நான்கு மணிநேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய கிழக்கு போரினால் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது குறித்து தனது அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் பெட்ரோலிய இருப்பு தொடர்பாக ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் (ADNOC) இந்தியாவின் பெட்ரோலிய இருப்பை அதிகரிக்கும். இது தவிர, எல்பிஜி விநியோகம் குறித்தும் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது பற்றியும் ஆலோசனை நடத்தினர்.

மேலும் வழக்கமான எரிசக்தி ஆதாரங்களுக்கு அப்பாற்பட்டு மாற்று எரிசக்தி ஆதாரங்களை அவசரமாக ஆராயுமாறு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

எல்பிஜி சமையல் எரிவாயுவிற்கு மாற்றாக உயிரிவாயுவைப் பயன்படுத்தவும் பிரதமர் வலியுறுத்தினார்.

விக்ஷித் பாரத் 2047 என்பது வெறும் வாக்குறுதி மட்டுமல்ல, அது ஒரு அர்ப்பணிப்பு என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், சீர்திருத்தங்களை வீரியத்துடன் செயல்படுத்துமாறு தனது அமைச்சர்களைக் கேட்டுக்கொண்டார்.