கோவிலில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, குடும்பத்துடன் வழிபட்ட காட்சி.  
தலைப்புச்செய்திகள்

விஜய் முதலமைச்சரானது அனைத்து துறையினருக்கும் நல்லது- மாசாணியம்மன் கோவிலில் வழிபட்ட ஆர்.ஜே. பாலாஜி பேட்டி

மாசாணி அம்மன் கோவிலில் முதல் பூஜை செய்த பிறகுதான் கருப்பு படத்தை தொடங்கினோம்.

டைரக்டர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடிகர் சூர்யா நடித்து வெளியான கருப்பு படம் வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தின் தொடக்க பூஜை கோவை மாவட்டம் ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோவிலில் நடந்தது.

கோவிலில் வழிபாடு

படம் வெற்றி பெற்றதையொட்டி நடிகரும், டைரக்டருமான ஆர்.ஜே.பாலாஜி, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குடும்பத்துடன் வந்து மனமுருக வழிபட்டார். அம்மன் சன்னதி முன்பு தரையில் விழுந்து வணங்கிய ஆர்.ஜே.பாலாஜி, கோவில் கொடிமரத்தையும் தொட்டு கும்பிட்டார். அதன்பிறகு கோவிலை சுற்றி வலம் வந்து பிரகார தெய்வங்களையும் வழிபட்டார். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அவருடன் போட்டி போட்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

மாசாணி அம்மன் கோவிலில் முதல் பூஜை செய்த பிறகுதான் கருப்பு படத்தை தொடங்கினோம். மேலும் இந்த படத்தின் கதைக்கரு மாசாணி அம்மனை சார்ந்து அமைந்ததுதான். பொள்ளாச்சியை சேர்ந்த அருண் என்பவருடன் ஒருதடவை கோவிலுக்கு வந்திருந்தேன். அப்போது அவர், கோவிலில் மிளகாய் அரைத்து மாசாணி அம்மனை வழிபடுங்கள் அண்ணா. தீராத பகைகள், பிரச்சினைகள் மற்றம் வழக்குகள் தீரும் என்று தெரிவித்தார்.

அம்மனுக்கு பூஜை

கருப்பு படத்தின் கதைக்கரு கோர்ட்டை சுற்றியே அமைந்து இருந்தது. இதனால் படத்தின் அம்சங்களை விரிவுபடுத்த திட்டமிட்டோம். அப்போது

தான் எனக்கு மாசாணி அம்மன் நினைவுக்கு வந்தார். தொடர்ந்து அம்மனிடம் அனுமதி கேட்டு படம் எடுக்க முடிவெடுத்தோம். பின்னர் மாசாணி அம்மன் முன்பு படத்தை பூஜை போட்டு படத்தை தொடங்கினோம்.

கருப்பு படம் மாபெரும் வெற்றி பெற்று உள்ளது. தொடர்ந்து மாசாணி அம்மனுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இங்கு வந்து உள்ளோம். அனைத்து துறைகளுக்கும் நல்லது இந்த படத்தை குடும்பத்துடன் வந்து பார்த்த பொது

கருப்பு

கருப்பு படம்

மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. கருப்பு படம் வெற்றிபெறும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் நாங்கள் நினைத்ததைவிட 100 மடங்கு வெற்றி கிடைத்து உள்ளது.

விஜய்

முதலமைச்சர் விஜய் பதவியேற்ற 4-வதுநாளில் படத்தை வெளியிட்டோம். அதன்பிறகு அவரை நேரடியாக சந்தித்தோம். எங்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சராக விஜய் பதவியேற்றது திரைத்துறைக்கு மட்டுமின்றி அனைத்து துறைகளுக்கும் நல்லது.

நடிகர் சூர்யா

என்னை நம்பி படம் எடுத்த தயாரிப்பாளர், நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் படக்குழுவினருக்கு நடிகர் சூர்யா கார் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மாசாணி அம்மன் கோவிலில் இருந்து நடிகர் ஆர்.ஜே.பாலாஜி குடும்பத்துடன் காரில் புறப்பட்டு சென்றார்.