ஈரானுடனான அமைதி ஒப்பந்தத்தின் இறுதி வடிவம் தனக்கு திருப்தி அளிக்காவிட்டால், மீண்டும் குண்டுமழை பொழிய அமெரிக்கா தயங்காது என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் ஜூன்.19ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளநிலையில், பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பேசிய ட்ரம்ப் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.
“அது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே. எனக்கு அது பிடிக்கவில்லை என்றால், நாங்கள் மீண்டும் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவும், அவர்களின் தலைகளில் குண்டுகளை வீசவும் தொடங்குவோம்.
எனக்கு அது பிடிக்கவில்லை என்றாலோ, அல்லது அவர்கள் ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை என்றாலோ, நாங்கள் உடனடியாக அவர்களின் தலையின் நடுப்பகுதியிலேயே துல்லியமாக குண்டுகளை வீசத் தொடங்குவோம், சரியா?" என தெரிவித்துள்ளார்.