தலைப்புச்செய்திகள்

புளோரிடா விமான விபத்து- 'காஃபின் கார்னர்' ஆபத்து தான் காரணமா?

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நிகழ்ந்த கோர விபத்தில் தனியார் லியர் ஜெட் விமானம் சுக்குநூறாக வெடித்துச் சிதறியதில் 9 பேர் உயிரிழந்தனர்.

டெக்சாஸில் உள்ள ஆஸ்டின் நகரிலிருந்து பஹாமாஸ் தீவுகளை நோக்கிச் சென்ற 'லியர்ஜெட் 60' என்ற அந்த தனியார் விமானம், புளோரிடாவில் உள்ள ஒரு பலவழி நெடுஞ்சாலையின் மீது திடீரென மூழ்கி விழுந்து வெடித்துச் சிதறியது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நிகழ்ந்த கோர விபத்தில் தனியார் லியர் ஜெட் விமானம் சுக்குநூறாக வெடித்துச் சிதறியதில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கான உண்மையான காரணம் குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் ஃபெடரல் விமான போக்குவரத்து நிர்வாகம் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், விமானத்தில் நிகழ்ந்திருக்கக் கூடிய 'காஃபின் கார்னர்' எனப்படும் ஆபத்தான வான்வெளி நிகழ்வு குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டினில் இருந்து பஹாமாஸ் நோக்கிச் சென்ற இந்தத் தனியார் விமானத்தில் இரண்டு விமானிகள் மற்றும் பயணிகள் உட்பட மொத்தம் 9 பேர் பயணம் செய்தனர். புளோரிடாவின் பாம் பீச் கவுண்டி பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தில் கடுமையான பனிமூட்டம் மற்றும் பலத்த காற்றுச் சுழற்சி ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து விமானிகள் அவசரநிலையைப் பிரகடனம் செய்துள்ளனர். எனினும், கட்டுப்பாட்டை இழந்த விமானம் நிமிடத்திற்கு 20,000 முதல் 32,000 அடிக்கும் அதிகமான வேகத்தில் செங்குத்தாகக் கீழே பொத்தென்று சரிந்துள்ளது. விபத்து நடப்பதற்கு சற்று முன்பு ஏவுகணை போல அதிவேகத்தில் கீழ்நோக்கிப் பாய்ந்த இந்த விமானம், தரையில் மோதி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

என்ன இந்த 'காஃபின் கார்னர்' ஆபத்து?

அதிக உயரத்தில் பறக்கும் விமானங்களுக்கு ஏற்படும் ஒரு ஆபத்தான வானியல் மற்றும் காற்றியக்கவியல் நிலையே 'காஃபின் கார்னர்' என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில், விமானம் மிக மெதுவாகப் பறந்தால் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழும் அபாயமும், அதே நேரத்தில் சற்று வேகமாகப் பறந்தாலும் ஒலியின் வேக எல்லையைத் தாண்டி விமானத்தின் கட்டமைப்பு சேதமடையும் ஆபத்தும் ஒரே நேரத்தில் ஏற்படும்.

இந்த இரண்டு எல்லைகளுக்கும் இடைப்பட்ட குறுகிய வான்வெளிப் பகுதி மிகவும் ஆபத்தானது என்பதால், அங்கே விமானத்தைக் கட்டுப்படுத்துவது விமானிகளுக்கு மிகப்பெரிய சவாலாக அமையும். தற்போதைய விபத்தில் கடுமையான வானிலை மாற்றங்களால் விமானம் இந்த ஆபத்தான பகுதிக்குள் நுழைந்திருக்கலாமோ என்ற கோணத்திலும் வல்லுநர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த கோர விபத்தில் தொழில்நுட்பத் துறை பிரபலங்கள் மற்றும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என அனைத்து பயணிகளும் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், விமானத்தின் காக்பீட் குரல் பதிவுக்கருவி மற்றும் சிதறிய பாகங்களைக் கொண்டு முழுமையான விபத்துக்கான காரணத்தை கண்டறியும் பணியில் பாதுகாப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT