தலைப்புச்செய்திகள்

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் திடீர் முடக்கம்: பயனர்கள் அவதி

உலகம் முழுவதும் இந்த தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாக தெரிய வந்தது.

உலகின் முன்னணி சமூக வலைதளங்களாக விளங்குபவை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம். மெட்டா நிறுவனத்தின் கீழ் செயல்படும் இந்த வலைதளங்கள் இன்று இரவு திடீரென முடங்கின. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்பற்று இருந்தன.

உலகம் முழுவதும் இந்த தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாக தெரியவந்தது.

பயனர்கள் தங்கள் கணக்குகளில் இருந்து தானாகவே வெளியேற்றப்படுவது, செய்திகள் மற்றும் பதிவுகள் ஏற்றப்படாமல் இருப்பது, பக்கங்கள் திறக்கப்படாமல் இருப்பது போன்ற சிக்கல்கள் உலகம் முழுவதும் பதிவாகியுள்ளன.

இதன் காரணமாக பல லட்சம் பயனர்கள் புகார் செய்துள்ளனர். அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் இருந்தே மிக அதிகளவிலான புகார்கள் பதிவாகியது. இந்த பாதிப்பு இலங்கை உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயனர்களை பாதித்துள்ளது.

சைபர் கிரைம் ஹேக்கர்களின் கைவரிசையால் இந்த தடை ஏற்பட்டதா அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயல்பாடு துண்டிக்கப்பட்டதா என தெரியவில்லை.

SCROLL FOR NEXT