தலைப்புச்செய்திகள்

இடைத்தேர்தல்: அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பமனு 10-ந் தேதி வரை பெறலாம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்றவர்கள் தலைமைக்கழகத்தில் இன்று (8-ந் தேதி) முதல் 10-ந் தேதி (வியாழக்கிழமை) வரை வழங்கப்படுகிறது.

அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, 10-ந் தேதி மாலை 6 மணிக்குள் தலைமைக்கழகத்தில் வழங்கலாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனுக்களை பெறலாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:-

மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்றவர்கள் தலைமைக்கழகத்தில் இன்று (8-ந் தேதி) முதல் 10-ந் தேதி (வியாழக்கிழமை) வரை வழங்கப்படுகிறது.

படிவங்கள்

தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரையிலும் அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, 10-ந் தேதி மாலை 6 மணிக்குள் தலைமைக்கழகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT