தலைப்புச்செய்திகள்

நேபாள மக்களின் புதுமை தீபாவளி

தீபாவளி திருவிழா (திஹார் விழா) நேபாளத்தில் நவம்பர் 7-த் தேதி (நேற்று) தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது.

விழாவின் முதல் நாள் 'காக் திஹார்' என்று காகங்களை வழிபடும் நாளாகும். காகங்களுக்கு உணவளித்து, வீட்டின் கூரைகளில் பலகாரங்கள் வைத்து வணங்குவர்.

திஹார்

இந்தியாவை போன்று நேபாளத்தில் தீபாவளி பண்டிகையை 'திஹார் விழா' என்று 5 நாட்கள் மிகவும் புதுமையான முறையில் கொண்டாடுகிறார்கள். 'திஹார்' என்பது ஒளித்திருவிழா என்று நேபாளத்தில் கூறப்படுகிறது. திஹார் விழா அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் கொண்டாடப்படுகிறது.

குகுர் திஹார்

இந்த ஆண்டிற்கான தீபாவளி திருவிழா (திஹார் விழா) நேபாளத்தில் நவம்பர் 7-த் தேதி (நேற்று) தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவின் முதல் நாள் 'காக் திஹார்' என்று காகங்களை வழிபடும் நாளாகும். காகங்களுக்கு உணவளித்து, வீட்டின் கூரைகளில் பலகாரங்கள் வைத்து வணங்குவர்.

2-வது நாள் 'குகுர் திஹார்' என நாய்களை வழிபடும் நாளாகவும், 3-வது நாள் 'காய் திஹார் மற்றும் லட்சுமி பூஜை என்று பசு மற்றும் லட்சுமி தேவியை வழிபடும் நாளாகவும் விளங்குகிறது.

பாய் திஹார்

4-வது நாள் 'கோவர்தன் பூஜை' அல்லது கோரு திஹார் என்று எருதுகளை வழிபடும் நாளாகும். விவசாயத்திற்கு உதவும் எருதுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்நாளில் சடங்குகள் செய்வார்கள். சில சமூகத்தினர் கோவர்தன் மலையை பிரதிபலிக்கும் வகையில் சாணத்தால் மலை போன்று செய்து வழிபடுவர்.

5-வது நாள் 'பாய் திஹார் என்று சகோதரத்துவத்தை கொண்டாடும் நாள். சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் நெற்றியில் ஏழு வண்ண திலகமிட்டு அவர்கள் நீண்ட ஆயுளுடனும், வளத்துடனும் வாழ வாழ்த்துவார்கள்.

SCROLL FOR NEXT