தலைப்புச்செய்திகள்

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தாமதம்: பிரதமர் மோடி, அமித்ஷாவை சாடிய காங்கிரஸ்

மழைக்காலக் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு 100 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் முறையாகக் கலைக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறுமா இல்லையா, அப்படி நடந்தால் எப்போது தொடங்கும் என்பதை நாட்டு மக்கள் இதுவரை அறிந்திருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் குறித்த தொடர் நிச்சயமற்ற தன்மையால், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தங்களது வாய்ஜாலங்களிலும் தந்திரங்களிலும் சிக்கிக்கொண்டுள்ளனரா அல்லது ஏதேனும் "மிகவும் மோசமான திட்டத்தை" தீட்டி வருகின்றனரா என்ற கேள்வி எழுந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

ஞானேஷ் திருட்டு

அண்மையில் வெளியான 'ஜிடிஏ-6' காணொளி விளையாட்டைக் குறிப்பிட்டு, 'ஜிடிஏ' என்பதற்கு 'ஞானேஷ் திருட்டு ஏற்பாட்டாளர்கள்' எனப் பொருள் கற்பித்து, அந்த இரு நட்சத்திரங்களும் அம்பலமாகிவிட்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த விவகாரத்தால் நாடாளுமன்றம் என்ற ஜனநாயக அமைப்பின் மாண்பு மேலும் சிதைக்கப்படுவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

மழைக்காலக் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு 100 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் முறையாகக் கலைக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. குளிர்காலக் கூட்டத்தொடர் எப்போது நடைபெறும் என்பதையும், நிலுவையில் உள்ள மழைக்காலக் கூட்டத்தொடர் மீண்டும் கூட்டப்படுமா என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

விக்ஸித் பாரத்

மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை உருவாக்கி, தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 'விக்ஸித் பாரத்' இலக்கை எட்டும் வரை, தற்போதைய 543 மக்களவை இடங்கள் மற்றும் மாநில வாரியான தொகுதிப் பங்கீடுகளை மாற்றாமல் வைத்து, பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதே நாட்டின் நலனுக்கு உகந்தது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT