மின்சார ரெயில் 
தலைப்புச்செய்திகள்

சென்னை-செங்கல்பட்டு வழித்தடத்தில் மின்சார ரெயில்களின் சேவையில் நாளை முதல் மாற்றம்

மின்சார ரெயில்கள், தாம்பரம் - கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட உள்ளன.

எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக நாளை (25-ந்தேதி) முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை 25 மின்சார ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளன.

மின்சார ரெயில்கள்

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே நாளை முதல் செப்டம்பர் 5-ந்தேதி வரை இரவு 10.20, 11.20, 11.40, 11.59 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் வார நாட்களில் மட்டும் ரத்து செய்யப்பட உள்ளன.

திருமால்பூர் - சென்னை கடற்கரை

திருமால்பூர் - சென்னை கடற்கரை இடையே அதே தேதிகளில் இரவு 8 மணிக்கு புறப்படும் மின்சார ெரயில், தாம்பரம்-கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட உள்ளது.

கூடுவாஞ்சேரி - சென்னை கடற்கரை

கூடுவாஞ்சேரி - சென்னை கடற்கரை இடையே இரவு 10.15, 11.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள், தாம்பரம் - கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட உள்ளன. செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே அதே தேதிகளில் இரவு 10.20, 11 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரெயில்கள், தாம்பரம் - கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட உள்ளன.

சென்னை கடற்கரை - கூடுவாஞ்சேரி

சென்னை கடற்கரை - கூடுவாஞ்சேரி இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்கள் அதே தேதிகளில் இரவு 9.45 மணிக்கு பதிலாக, 5 நிமிடம் தாமதமாக இரவு 9.50 மணிக்கு புறப்படும். சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்கள் அதே தேதிகளில் இரவு 10.20 மணிக்கு பதிலாக, 5 நிமிடம் முன்னதாக, இரவு 10.15 மணிக்கு புறப்படும்.

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே நாளை மறுநாள் (புதன் கிழமை) முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை இயக்கப்பட வேண்டிய மின்சார ரெயில், வார நாட்களில் கடற்கரை - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வருகிற 30-ந்தேதி முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில், சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 4 மின்சார ரெயில்களும், தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே 2 மின்சார ரெயில்களும், திருமால்பூர் - சென்னை கடற்கரை இடையே ஒரு மின்சார ரெயிலும் ரத்து செய்யப்பட உள்ளன. இது தவிர, 6 மின்சார ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளன. இந்த தகவலை சென்னை ெரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.