மறைந்த தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் மகன் ஆதவன் முத்துக்குமார், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகும் 'ராஜா'ஸ் பிளேலிஸ்ட்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமாகிறார்.
மீண்டும் ஒருமுறை, யுவன் ஷங்கர் ராஜா ஒரு புகழ்பெற்ற இசைப் பாரம்பரியத்துடன் இம்முறை அடுத்த தலைமுறையின் மூலம். மறைந்த பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் மகனான ஆதவன் முத்துகுமார், யுவன் இசையமைக்கும் 'ராஜாஸ் பிளேலிஸ்ட்' திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகிறார் . இந்தக் கூட்டணி, யுவன் மற்றும் நா.முத்துகுமாரின் புகழ்பெற்ற இசைக் கூட்டணியை நினைவூட்டுகிறது.
சுஜித் என். சுப்ரமணியம் இயக்கும் இப்படத்திற்கு இயக்குநர் வெங்கட் பிரபு கதை எழுதியுள்ளார். இயக்குநர் சுதா கொங்கரா கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும், ரமணன் பாலகங்காதரன் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.
படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களாகஜெயன், சோனா ஒலிக்கல், வாகை சந்திரசேகர், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர்
2001-ஆம் ஆண்டு வெளியான நந்தா திரைப்படத்தில் தொடங்கி சுமார் 16 ஆண்டுகளில் 75-க்கும் மேற்பட்ட படங்களில் 400-க்கும் அதிகமான வெற்றிப் பாடல்களை யுவன் ஷங்கர் ராஜாவும் நா. முத்துக்குமாரும் இணைந்து வழங்கியுள்ளனர்.
இப்போது அதே யுவன் இசையில் முத்துக்குமாரின் மகன் தனது முதல் பாடலை எழுதியிருப்பது தமிழ் சினிமா ரசிகர்களிடையே நெகிழ்ச்சியையும் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.