செய்திகள்

அம்பேத்கர் இருந்திருந்தால் இப்போதைய ஆட்சியாளர்களுக்கு பிரம்படி நிச்சயம் - சிவசேனா

மகாராஷ்டிர மாநிலத்தின் முக்கிய கட்சியான சிவசேனா தனது சாமனா நாளிதழில், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்தும், மகாராஷ்டிர மாநில அரசு குறித்தும் கடுமையாக சாடியுள்ளது. #UddhavThackeray #ShivSena #Saamana

மாலை மலர்

பிரதமர் மோடி, நிதிமந்திரி அருண் ஜெட்லி ஆகியோர் தலைமையில் நேற்று மாலை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நிதிமந்திரி அருண் ஜெட்லி, பெட்ரோல் டீசல் மீதான வரியில் 2 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்படுவதாக அறிவித்தார்.

இதேபோல், பாஜக ஆளும் மாநிலங்களிலும் பெட்ரோல் டீசல் மீதான விலையை குறைக்க வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

அதேபோல், கடந்த புதன்கிழமை அன்று, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மகாராஷ்டிர முதல்மந்திரி தேவேந்திர பட்னாவீஸ், அம்பேத்கருக்கும், சத்ரபதி சிவாஜிக்கும் சிலை வைப்பதற்காக மாநிலத்தையே அடகு வைப்பதாக தெரிவித்திருந்தார். இதற்கு கடுமையாக பதிலடி கொடுத்துள்ள சிவசேனா, அரசியல் வெற்றிக்காக விளம்பரங்களுக்கு பயன்படுத்தும் பலகோடி ரூபாய் பணத்தை சிலைகள் அமைக்க பயன்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.