குலசேகரம்:
பேச்சிப்பாறை துணை மின் நிலையத்தில் நாளை (6-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை கடையாலுமூடு, கோதையார், குற்றியார், மைலார், உன்னிïர் கோணம், சிற்றார், களியல், ஆலஞ்சோலை, பத்துகாணி, திற்பரப்பு, திருநந்திக்கரை, மணியங்குழி, அரசமூடு ஆகிய இடங்களுக்கும், அவற்றை சார்ந்து துணை கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது.
இதேபோல வீயன்னூர் துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அந்த பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.
ஆற்றூர், தேமானூர், திருவட்டார், செருப்பாலூர், வெண்டலிக்கோடு, வலியாற்று முகம், பிலாவிளை, இரவிபுதூர் கடை, குமரன்குடி, பூவன்கோடு, வேர்கிளம்பி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படுவதாக மின் வினியோக உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.