நாசரேத்:
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் வியாபாரம், தொழில் செய் கிறவர்களுக்காக ஆசீர்வாத உபவாச ஜெபக்கூட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் 3 மணி வரை நடக்கிறது.
இயேசு விடுவிக்கிறார் ஜெபக்குழுவினர் சிறப்பு பாடல்கள் பாடுகின்றனர். தொழில், வியாபாரம், ஆசீர்வாதமாய் இருக்கவும், கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை பெறவும், தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டத்திலிருந்து விடுதலை பெறவும், தொழில் மற்றும் வியாபாரங்களுக்கு விரோதமான மந்திர மற்றும் பில்லிசூனியக் கட்டுகளில் இருந்து விடுதலை பெறவும் தேவ ஆலோசனைகளையும், சிறப்பு ஜெபத்தையும் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ், உடன் ஊழியர் அப்பாத்துரை ஆகியோர் நடத்துகின்றனர்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களின் சிறப்பு அனுபவ சாட்சிகள் இடம் பெறுகிறது. இந்த ஜெபத்தில் கடந்த ஆண்டில் சுமார் 35 ஆயிரத்திற்கும் அதிகமான தொழில் மற்றும் வியாபாரம் செய்கிறவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றுள்ளனர். தொழில் மற்றும் வியாபாரத்தை ஒருநாள் ஒதுக்கி வைத்து விட்டு ஆசீர்வாத உபவாச ஜெபத்திற்கு வந்து ஆசீர்வாதம் பெற்றுச்செல்லுமாறு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்திற்கு வர இயலாதவர்கள் உங்கள் ஜெபவிண்ணப்பங்களை எழுதி ‘ஆசீர்வாத உபவாச ஜெபம், இயேசு விடுவிக்கிறார், நாலுமாவடி’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கூட்டம் முடிந்ததும் திரும்பி செல்வதற்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஜெபக்குழுவினர் செய்து வருகின்றனர். #tamilnews