செய்திகள்

மு.க.ஸ்டாலின் நாளை கதிராமங்கலம் வருகை

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை கதிராமங்கலம் வருகிறார். அங்குள்ள பொதுமக்களிடம் ஓ.என்ஜி.சி.பாதிப்பு குறித்து அவர் கேட்டறிகிறார்.

கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும். இதற்காக போராட்டம் நடத்திய 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கதிராமங்கலம் கிராம மக்கள் அங்குள்ள அய்யனார் கோவில் வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். கதிராமங்கலத்தில் உண்ணா விரதத்தில் ஈடுபட்ட 5 பேருக்கு நேற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மேலும் 5 பேர் இன்று உண்ணாவிர த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை கதிராமங்கலம் வருகிறார். அங்குள்ள பொதுமக்களிடம் ஓ.என்ஜி.சி.பாதிப்பு குறித்து அவர் கேட்டறிகிறார்.

SCROLL FOR NEXT