உத்தரபிரதேசம் மாநிலத்தின் புலன்ஷர் பகுதியில் உள்ள இச்சாவாரி கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சமீபத்தில் கழிவறைகள் கட்டப்பட்டது.
இந்த கழிவறைகளின் சுவர்களில் தமிழ்நாடு அரசு சின்னம் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட டைல்ஸ்கள் போடப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக புலன்ஷர் பகுதி பஞ்சாயத்து அதிகாரி கூறுகையில், 'இந்த டைல்ஸ் உள்ளூர் சந்தையில் வாங்கப்பட்டது. 13 கழிவறைகளில் ஒட்டப்பட்டுள்ளது. இப்போது அவை அகற்றப்பட்டுவிடும்.