101 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளதால் கடல் போல் காட்சி அளிக்கும் பவானிசாகர் அணை 
செய்திகள்

11 எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவு, வேகமாக நிரம்பும் பவானிசாகர் அணை உள்ளிட்ட முக்கிய செய்திகள்- வீடியோ தொகுப்பு

பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு விடப்பட்டு உள்ளது.

இன்றைய முக்கிய செய்திகள் வருமாறு:

என்ஜிஓ தொடர்பான வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது

தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணித்து ஒழுங்குபடுத்தும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது. இந்த சட்டத் திருத்தத்தின்படி, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மொத்த வெளிநாட்டு நிதியில் 20 சதவீதத்திற்கு மேல் நிர்வாக செலவீனங்களுக்காக பயன்படுத்த முடியாது, அடையாளச் சான்றிதழாக ஆதார் எண் கட்டாயம் அளிக்க வேண்டும்.

கதிர் ஆனந்த் எம்பி புகார்... டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் சாணக்யரி போலீசார் விசாரணை

புலனாய்வு பிரிவினர் என்று கூறிக்கொண்டு 2 பேர் தன்னை தமிழ்நாடு இல்லத்தில் சந்தித்து மிரட்டும் வகையில் கேள்வி எழுப்பியதாக திமுக எம்பி கதிர் ஆனந்த் மாநிலங்களவையில் புகார் தெரிவித்தார்.  இது குறித்து டெல்லி சாணக்யபுரி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாடு இல்லத்தின் வருகை பதிவேடு மற்றும் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்கின்றனர்.

பாராளுமன்றம் இன்று காலவரம்பின்றி ஒத்திவைக்கப்படும்- மாநிலங்களவையில் மத்திய மந்திரி தகவல்

பாராளுமன்றத்தில் இன்று முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதும் பாராளுமன்றம் காலவரம்பின்றி ஒத்திவைக்கப்படுகிறது. எம்பிக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், முன்கூட்டியே மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைகிறது.

மாநிலங்களவையில் 11 எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவு- அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவிப்பு

உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 11 பேரின் பதவிக்காலம் நவம்பர் மாதம் நிறைவடைய உள்ளது. அவர்களின் பெயர்களை மாநிலங்களவையில் அவைத்தலைவர் வெங்கையா நாயுடு இன்று அறிவித்து, அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

நேற்று 83,347 புதிய நோயாளிகள்... இந்தியாவில் கொரோனா பாதிப்பு 56 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 56 லட்சத்தை கடந்துள்ளது. நேற்று மட்டும் 83,347 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். மொத்த உயிரிழப்பு 90 ஆயிரத்தை கடந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 45.87 லட்சமாக உயர்ந்துள்ளது. உலக அளவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

மும்பையில் விடிய விடிய கனமழை- மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு, ரெயில்கள் ரத்து

மும்பையில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தண்டவாளம் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் பல்வேறு வழித்தடங்களில் புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

மகாராஷ்டிரா கட்டிட விபத்து -உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 39 ஆக உயர்வு

மகாராஷ்டிர மாநிலம் பிவண்டியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. மூன்றாவது நாளாக இன்றும் மீட்பு பணி நடைபெறுகிறது.

மலப்புரம் அருகே உடல் உறுப்புகள் விற்பனைக்கு என்று போர்டு எழுதி வைத்து காத்திருந்த பெண்

கேரள மாநிலம் மலப்புரம் அருகே குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததால் உடல் உறுப்புகள் விற்பனைக்கு என்று போர்டு எழுதி வைத்து காத்திருந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

நிரம்பும் நிலையில் பவானிசாகர் அணை- ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு விடப்பட்டு உள்ளது.

வெள்ளை அரிசிக்கு பதிலாக ரேஷன் கடைகளில் தவிட்டு அரிசி- குமரி அனந்தன் கோரிக்கை

மதுரையில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக சலூன் கடை உரிமையாளர் மீது புகார்

சமீபத்தில் பாஜகவில் இணைந்த மதுரை சலூன்கடை உரிமையாளர் மோகன், கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தி தெரியாததால் கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர் பணியிட மாற்றம்

அரியலூர் அருகே, டாக்டருக்கு இந்தி தெரியாததால் கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வென்றால், அது சீனாவுக்கு கிடைத்த வெற்றியாகும் - டிரம்ப் விமர்சனம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வென்றால், அது சீனாவுக்கு கிடைத்த வெற்றியாகும் என டிரம்ப் விமர்சிள்ளார்.

ஐ.நா. ஊழியர்கள் எங்கள் கொரோனா தடுப்பூசியை இலவசமாக செலுத்திக்கொள்ளலாம் - ஐ.நா. கூட்டத்தில் ரஷிய அதிபர் புதின் அதிரடி

ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்கள் தங்கள் ஸ்பட்னிக் வி கொரோனா தடுப்பூசியை இலவசமாக செலுத்திக்கொள்ளலாம் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

வீட்டில் இருந்தே பணியை தொடருங்கள் - நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் : பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

பிரிட்டனில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டில் இருந்தே தங்கள் பணியை தொடருங்கள் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.பி.எல் கிரிக்கெட் : கொல்கத்தா - மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை - வெற்றியோடு தொடங்குமா கொல்கத்தா?

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா - மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐ.பி.எல். முதல் நாள் ஆட்டத்தை 20 கோடி பேர் பார்த்தனர் - இந்திய கிரிக்கெட் வாரியம் தகவல்

ஐ.பி.எல். முதல் நாள் ஆட்டத்தை டி.வி. மற்றும் இணையதளம் வாயிலாக மொத்தம் 20 கோடி பேர் கண்டுகளித்து இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று : அங்கிதா போராடி வெற்றி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தகுதிச்சுற்று போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா போராடி வெற்றி பெற்றார்.

திருமணமான இரண்டே வாரத்தில் கணவர் மீது பிரபல நடிகை பாலியல் புகார்