செய்திகள்

தன்னை மேன்மைப்படுத்த காந்தி, பட்டேலை இழிவுப்படுத்தவும் மோடி தயங்க மாட்டார் - ராகுல் தாக்கு

பிரதமர் மோடி தன்னை மேன்மைப்படுத்தி காட்டுவதற்காக மகாத்மா காந்தியையும் சர்தார் வல்லபாய் பட்டேலையும்கூட இழிவுப்படுத்துவார் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #Modi #demeanGandhi #demeanPatel #RahulGandhi #Kartarpur

மாலை மலர்

ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலையொட்டி நேற்று ஹனுமன்கர் பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, தொலைநோக்கு சிந்தனை இல்லாத காங்கிரசாரின் நடவடிக்கையால் பாகிஸ்தானில் சீக்கிய கோவில் அமைந்திருக்கும் கர்த்தார்பூர் பகுதியை நாம் இழந்து விட்டோம் என தெரிவித்தார். குருநானக் தேவுக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளிக்கவில்லை, சீக்கிய மதத்தினரின் உணர்வுகளுக்கும் அவர்கள் மதிப்பளிக்கவில்லை.

அதனால், 70 ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸ் செய்த இந்த தவறுக்கு தற்போது புதிய பாதையை அமைத்து நான் பரிகாரம் தேட வேண்டியுள்ளது. 70 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு இதை ஏன் செய்யவில்லை என்ற கேள்வியை உங்கள் தீர்ப்புக்கே நான் விட்டு விடுகிறேன் என்று கூறினார்.

இந்த கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பதிலடி தந்துள்ளார். இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் ராகுல் காந்தி இந்தி மொழியில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

‘அந்த காலத்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு போதிய ஞானம் இல்லாததால் கர்த்தார்பூரை இந்தியா இழந்து விட்டதாக மோடி இப்போது கூறுகிறார்.