வி.ஏ.ஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு வருகிற செப்டம்பர் 1-ந்தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்வில் பங்கேற்பதற்கு வருகிற 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை அடுத்த மாதம் 14-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.