மணப்பெண் ஜீவிதா டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத காரில் வந்து இறங்கிய போது எடுத்த படம். 
செய்திகள்

சிவகிரியில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிய மணப்பெண்

சிவகிரியில் திருமணம் முடிந்த கையோடு டி.என்.பி.எஸ்.சி. குருப்-4 தேர்வு எழுதிய மணமகளுக்கு அந்த மையத்தில் தேர்வு எழுதிய மற்றவர்கள் திருமண வாழ்த்துக்களை கூறினார்கள்.

மாலை மலர்

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த தர்மராஜ் என்பவரது மகள் ஜீவிதா (வயது 23).

சிவகிரியை சேர்ந்த அம்பிகா சுந்தரமுர்த்தி என்பவரின் மகன் சதீஸ்குமார் (26). சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ளார். இவர்களக்கு திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொடுமுடி அருகே உள்ள ஒத்தக்கடையில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று காலை 7 மணிக்கு திருமணம் நடந்தது.

மணமகன் கையால் தாலியை அணிந்து கொண்ட புதுப்பெண் அடுத்த கனம் இன்று நடந்த டி.என். பி.எஸ்.சி. குருப்-4 தேர்வு எழுத புறப்பட்டார்.

சிவகிரியில் உள்ள எஸ்.எஸ்.சி. மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்துக்கு வந்தார். அங்கு மற்றவர்களுடன் அமர்ந்து மணப்பெண் ஜீவிதா தேர்வு எழுதினார்.

திருமணம் முடிந்த கையோடு டி.என்.பி.எஸ்.சி. குருப்-4 தேர்வு எழுதிய மணமகள் ஜீவிதாவுக்கு அந்த மையத்தில் தேர்வு எழுதிய மற்றவர்கள் திருமண வாழ்த்துக்களை கூறியதோடு பரீட்சையில் வெற்றி பெறவும் வாழ்த்து கூறினர்.