சென்னை:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால், பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி துறை ரீதியிலான தேர்வு நாளை தொடங்கி 31-ம் தேதி வரை நடக்க உள்ளது.
இதே போல, மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகளும் நடக்க உள்ளது. கலவர சூழலை அடுத்து, இரு தேர்வுகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.