சஞ்சய் யாதவ் 
செய்திகள்

சஞ்சய் யாதவின் அதிரடியால் காரைக்குடி காளைக்கு 178 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது காஞ்சி வீரன்ஸ்

திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் சஞ்சயின் அதிரடி ஆட்டத்தால் காரைக்குடி காளைக்கு 178 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது காஞ்சி வீரன்ஸ்.

மாலை மலர்

அதன்படி காஞ்சி வீரன்ஸ் அணியின் விஷால் வைத்யா, முகிலேஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முகிலேஷ் ரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அடுத்து விஷால் உடன் சஞ்சய் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

குறிப்பாக சஞ்சய் யாதவ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விஷால் 27 ரன்னில் ஆட்டமிழக்க சஞ்சய் யாதவ் 32 பந்தில் அரைசதம் அடித்தார். அடுத்து வந்த அபரஜித் 19 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ஆர் சதீஷ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த சஞ்சய் சதத்தை நோக்கி சென்றார்.