டி.என்.பி.எல். கிரிக்கெட் லோகோ வெளியீட்டு விழா நடந்த போது எடுத்த படம். 
செய்திகள்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: முதல் ஆட்டத்தில் தூத்துக்குடி- திண்டுக்கல் அணிகள் மோதல்

அடுத்த மாதம் (ஜூலை) 22-ந்தேதி தொடங்கும் 2-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, திண்டுக்கல் டிராகன்சுடன் சென்னையில் சந்திக்கிறது.

மாலை மலர்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 2-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 8 அணிகள் இடையிலான இந்த போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 22-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 20-ந்தேதி வரை சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய 3 இடங்களில் நடத்தப்படுகிறது.

ஜூலை 22-ந்தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, திண்டுக்கல் டிராகன்சுடன் சென்னையில் சந்திக்கிறது. கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் திருவள்ளூர் வீரன்சுடன் ஜூலை 24-ந்தேதி நெல்லையில் மோதுகிறது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தனது அடுத்த லீக் ஆட்டங்களில் கோவை கிங்சை ஜூலை 29-ந்தேதியும் (சென்னை), தூத்துக்குடி பேட்ரியாட்சை ஆகஸ்டு 1-ந்தேதியும் (நெல்லை), காரைக்குடி காளையை ஆகஸ்டு 4-ந்தேதியும் (சென்னை), மதுரை சூப்பர் ஜெயன்ட்டை ஆகஸ்டு 6-ந்தேதியும் (சென்னை), திருச்சி வாரியர்சை ஆகஸ்டு 9-ந்தேதியும் (திண்டுக்கல்), திண்டுக்கல் டிராகன்சை ஆகஸ்டு 13-ந்தேதியும் (திண்டுக்கல்) எதிர்கொள்கிறது. ஆட்டங்கள் மாலை 3.30 மணி, இரவு 7.30 மணி ஆகிய நேரங்களில் தொடங்கி நடைபெறும்.