செய்திகள்

டி.என்.பி.எல்.: மழையால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - காரைக்குடி காளை ஆட்டம் தாமதம்

டி.என்.பி.எல். டி20 லீக் தொடரின் இன்றைய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - காரைக்குடி காளை அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் தாமதமாகியுள்ளது.

மாலை மலர்

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டின் 2-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 16-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக் மைதானத்தில் இன்றிரவு 7.15 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - காரைக்குடி காளை பலப்ரீட்சை நடத்த இருக்கிறது.

இதற்கான டாஸ் சுமார் இரவு 6.45 மணிக்கு சுண்டப்பட வேண்டும். ஆனால் மழை பெய்த காரணத்தால் போட்டி தொடங்குவதில் காலதாமதம் ஆகியுள்ளது.