தமிழ்நாடு மின்சார வாரியம் 
செய்திகள்

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த மேலும் 15 நாள் அவகாசம்

சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த மேலும் 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

சென்னை:

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

ஊரடங்கு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தேனி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த மேலும் 15 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக மின்உற்பத்தி, பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.

இணைய தளம் வாயிலாகவும் மின் கட்டணத்தை செலுத்தலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT