பலியான திருமணி செல்வன் 
செய்திகள்

காஷ்மீர் கல்வீச்சு தாக்குதலில் பலியான சென்னை வாலிபர் குடும்பத்தாருக்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் நிதியுதவி

காஷ்மீரில் நடைபெற்ற கல்வீச்சு தாக்குதலில் பலியான சென்னை வாலிபர் திருமணியின் குடும்பத்தாருக்கு ரூ. 3 லட்சம் நிதி வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளார். #StonePelt #TNTourist #Thirumani #TNCMsolatium

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நர்பால் பகுதியில் நேற்று ரோந்து சென்ற பாதுகாப்பு படையினர் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு பதிலடியாக பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்தனர்.

இந்த கல்வீச்சு தாக்குதலில் அப்பகுதியில் சுற்றுலா சென்ற சென்னையை அடுத்த ஆவடியை சேர்ந்த திருமணி (22) என்ற இளைஞர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற கல்வீச்சு சம்பவத்தில் பலியான சென்னை வாலிபரின் பெற்றோரை சந்தித்து முதல் மந்திரி மெகபூபா முப்தி இரங்கல் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT