டி.டி.வி. தினகரன் சசிகலாவை சந்திப்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து கார் மூலம் பெங்களூரு புறப்பட்டு சென்றார். பின்னர் மாலை 4 மணியளவில் சசிகலாவை சந்தித்து தினகரன் பேசினார். தினகரனுடன், வெற்றிவேல், இன்பதுரை, பார்த்தீபன், தங்க தமிழ்செல்வன், ஜக்கையன், கதிர்காமு உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களும் சசிகலாவை சந்திக்க சென்றனர்.
இந்த நிலையில் இன்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் 17 அமைச்சர்கள் அவசர கூடி ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனை கூட்டம் தலைமை செயலலகத்தில் உள்ள அமைச்சர் ஜெயக்குமார் அறையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், சீனிவாசன், செல்லூர் ராஜூ, காமராஜ், வளர்மதி, ஓ.எஸ்.மணியன், எம்.சி.சம்பத், சரோஜா, உள்ளிட்டோர் பங்கேற்றனர். சசிகலாவை சந்திக்க தினகரன் பெங்களூரு சென்றுள்ள நிலையில் அமைச்சர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.